பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் நேரடி தேர்வு கட்டாயம் உயர் கல்வித்துறை செயலர் உத்தரவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள்துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கான டிசம்பர் மாத தேர்வுகளை, மீண்டும் நேரடி முறையில் நடத்த அரசு திட்டமிட்டது.முதற் கட்டமாக, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், டிசம்பரில்நேரடி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் நேரடி

சென்னை:தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள்துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கான டிசம்பர் மாத தேர்வுகளை, மீண்டும் நேரடி முறையில் நடத்த அரசு திட்டமிட்டது.

முதற் கட்டமாக, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், டிசம்பரில்நேரடி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் நேரடி தேர்வு முறை அமலாகும் என்று, அண்ணா பல்கலை அறிவித்தது. மற்ற பல்கலைகளும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்து, நேரடி தேர்வு முறையை அறிவித்துள்ளன.இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆன்லைன் வழியில், வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் முறையை தொடர வேண்டும் என பல்வேறு மாணவர் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மதுரை உள்ளிட்ட சில இடங்களில், இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், பாலிடெக்னிக்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழக உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகளும், பல்கலைகளும், அனைத்து தேர்வுகளையும் நேரடியான, 'ஆப்லைன்' முறையிலேயே நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது.எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நேரடியான தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி திறனை வளர்க்கவும், தொழில் நிறுவன பணிகளில் சேரும் வகையில், அவர்களை தயார்படுத்தவும், நேரடி தேர்வு முறையே சிறந்தது. எனவே, மீண்டும் நேரடி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X