பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் 3வது நாளாக 40000 கனஅடி நீர் வெளியேற்றம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மேட்டூர்:மேட்டூர் அணையில் நேற்று தொடர்ந்து 3வது நாளாக 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி. நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 13ல் இரவு 9:30 மணிக்கு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.கடந்த 14ல் அதிகாலை முதல் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 120.10 அடி

மேட்டூர்:மேட்டூர் அணையில் நேற்று தொடர்ந்து 3வது நாளாக 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி. நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 13ல் இரவு 9:30 மணிக்கு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.கடந்த 14ல் அதிகாலை முதல் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 120.10 அடி நீர் இருப்பு 93.63 டி.எம்.சி.யாக இருந்தது.

வினாடிக்கு 40 ஆயிரத்து 120 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.நேற்று முன்தினம் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு அணை நீர்மட்டம் 120.10 அடி நீர் இருப்பு 93.63 டி.எம்.சி.யாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X