முட்டைகோஸ் விலை வீழ்ச்சி நீலகிரி விவசாயிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டைகோஸ் விலை வீழ்ச்சி நீலகிரி விவசாயிகள் கவலை

Added : நவ 17, 2021
Share
கோத்தகிரி:நீலகிரியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு கூடுதல் நிலப்பரப்பில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டு உள்ளது. ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்ததால் பெரும்பாலான தோட்டங்களில் முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளன.தற்போது ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இடுபொருட்களின்
 முட்டைகோஸ் விலை வீழ்ச்சி நீலகிரி விவசாயிகள் கவலை

கோத்தகிரி:நீலகிரியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு கூடுதல் நிலப்பரப்பில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டு உள்ளது. ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்ததால் பெரும்பாலான தோட்டங்களில் முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளன.தற்போது ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது.

இடுபொருட்களின் விலையேற்றம் கூலி உயர்வு தோட்ட பராமரிப்பு அறுவடை கூலி மற்றும் மண்டி கமிஷன் உட்பட செலவினங்கள் தற்போது கிடைக்கும் விலையை விட மூன்று மடங்கு அதிகம். இதனால் விவசாயிகள் கூடுதல் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
கட்டபெட்டு பகுதியில் அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில் 'கிலோவுக்கு 25 ரூபாய் கிடைத்தால் மட்டுமே செலவிட்ட தொகை கிடைக்கும். அரசு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X