கள்ளநோட்டு வழக்கில் இருவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளநோட்டு வழக்கில் இருவர் கைது

Added : நவ 17, 2021
Share
சென்னை:கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.சென்னை மதுரையில் 2017ல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிக்கு பிடியாணை பிறப்பிக்கப் பட்டது. அவர்கள் தப்பி சென்ற நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தது.இந்நிலையில் மதுரை கள்ளநோட்டு தடுப்பு பிரிவு

சென்னை:கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

சென்னை மதுரையில் 2017ல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிக்கு பிடியாணை பிறப்பிக்கப் பட்டது. அவர்கள் தப்பி சென்ற நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தது.இந்நிலையில் மதுரை கள்ளநோட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்ற மேற்கு வங்கம் சென்றனர்.

அங்கு மால்டா நகரில் பதுங்கியிருந்த வஹதுார்குமான் 32 திலிப் பிரமன் 37 ஆகிய இருவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இங்கு நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X