ஒடிசாவில் 'ரெய்டு ' நடத்த வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் மீது கிராமவாசிகள் தாக்குதல்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : ஒடிசாவில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை தொடர்பாக விசாரிக்க வந்த சி.பி.ஐ. அதிகாரிகளை கிராம வாசிகள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 83 பேர் மீது, 23 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்திருந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா,
 சி.பி.ஐ., அதிகாரிகள், தாக்குதல், ஒடிசா, CBI team probing online child sexual abuse case in Odisha village attacked by locals Watch

புதுடில்லி : ஒடிசாவில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை தொடர்பாக விசாரிக்க வந்த சி.பி.ஐ. அதிகாரிகளை கிராம வாசிகள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 83 பேர் மீது, 23 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்திருந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் 76 இடங்களில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.


latest tamil news


.

இந்நிலையில் நேற்று (நவ.16) ஒடிசா மாநிலம் தன்கனால் மாவட்டத்தில் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் சோதனை நடத்த முயன்றனர். இதற்கு அப்பகுதி உள்ளூர் கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சோதனை செய்ய விடாமல் தடுத்ததுடன் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

உடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கிராமவாசிகளிடமிருந்து சி.பி.ஐ., அதிகாரிகளை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
17-நவ-202113:56:57 IST Report Abuse
தமிழ்வேள் அடித்த கிராம வாசிகளும் பாலியல் வன்முறைக்கு துணை போனவர்களாகவே இருப்பார்கள் ...தாக்குதலில் ஈடுபட்ட கிராமவாசிகளை பிடித்து இரண்டு கைகளையும் பொது இடங்களில் வைத்து , ஒடித்து விடுவது நல்லது . இல்லையேல் இவர்களை போன்ற குற்ற ஆதரவு மனப்பான்மை கொண்டவர்களுக்கு பயம் இருக்காது ....வன்முறையாக இருப்பினும் , இவர்களை அடக்கிவைக்க வேறு வழி கிடையாது
Rate this:
Cancel
17-நவ-202110:35:52 IST Report Abuse
அப்புசாமி இந்த தொப்பை ரெய்டுகள் வெறும் நியூசோட சரி. பொறகு ஒண்ணும் நடக்காது. சுவரேறி குதிச்சு கைது செய்து நியூஸ் வந்த அதிகாரி அட்ரசயே காணம். கைதான பசி தைரியமா வெளியே உலா வந்துக்கிட்டிருக்காரு. வெறுமனே, அவர் பேரைக் கெடுக்கவே இந்த கைது டிராமா மாதிரி தோணுது.
Rate this:
Cancel
17-நவ-202108:33:12 IST Report Abuse
பேசும் தமிழன் எல்லாம் மமதை பேகம் வேலையாக இருக்கும்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
17-நவ-202110:11:39 IST Report Abuse
Rajaஒடிஷாவுக்கும் மம்தாவுக்கு என்ன சம்பந்தம்....
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-202111:47:51 IST Report Abuse
rameshஇது தான் சங்கிகளின் மூளை மேற்கு வங்கத்துக்கும் ஒடிஷாவுக்கும் கூட வித்யாசம் தெரியாத முட்டா பசங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X