ஆலைக்குரிய ரகம் கோவை கரும்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலைக்குரிய ரகம் கோவை கரும்பு

Added : நவ 17, 2021
Share
'கோவை- - 11015' ரக கரும்பு சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனக்கு சொந்தமான செம்மண் மற்றும் சவுடு கலந்த களி மண் நிலத்தில், பல ரக கரும்பு சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், 'கோவை- - 11015' ஒன்று.இந்த ரகம், 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு, 60 டன்னுக்கு மேல் மகசூல் பெறலாம். உள்ளூர் மற்றும்
 ஆலைக்குரிய ரகம் கோவை கரும்பு

'கோவை- - 11015' ரக கரும்பு சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

எனக்கு சொந்தமான செம்மண் மற்றும் சவுடு கலந்த களி மண் நிலத்தில், பல ரக கரும்பு சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், 'கோவை- - 11015' ஒன்று.இந்த ரகம், 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு, 60 டன்னுக்கு மேல் மகசூல் பெறலாம். உள்ளூர் மற்றும் ஆந்திரா ரகங்களைவிட கூடுதல் மகசூல் பெற முடிகிறது.எத்தனை வெட்டு அறுவடை செய்தாலும், ஆலைக்குரிய சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கும். தொடர் சாகுபடிக்கும், உகந்த ரக கரும்பு சாகுபடியாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X