செல்லேரி ஓடை சீரமைப்பு பணி தீவிரம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருநீர்மலை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்பட்ட செல்லேரி ஓடையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.திருமுடிவாக்கம்- திருநீர்மலை வழியாக அடையாறு ஆற்றுக்கும் செல்லும் செல்லேரி ஓடையை, புதர்கள் அகற்றி சீரமைக்கும் பணி நடக்கிறது,திருநீர்மலையை அடுத்த பழந்தண்டலம் பகுதியில் இருந்து, திருமுடிவாக்கம், திருநீர்மலை வழியாக, அடையாறு ஆற்றுக்கு
 செல்லேரி ஓடை சீரமைப்பு பணி தீவிரம்

திருநீர்மலை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்பட்ட செல்லேரி ஓடையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருமுடிவாக்கம்- திருநீர்மலை வழியாக அடையாறு ஆற்றுக்கும் செல்லும் செல்லேரி ஓடையை, புதர்கள் அகற்றி சீரமைக்கும் பணி நடக்கிறது,திருநீர்மலையை அடுத்த பழந்தண்டலம் பகுதியில் இருந்து, திருமுடிவாக்கம், திருநீர்மலை வழியாக, அடையாறு ஆற்றுக்கு செல்கிறது, செல்லேரி ஓடை.மழையின்போது, பழந்தண்டலம், திருமுடிவாக்கம், திருமுடிவாக்கம் சிட்கோ, காவனுார், சிறுகளத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், செல்லேரி ஓடை வழியாக, அடையாற்றில் கலக்கிறது. இந்த ஓடையின் 2.5 கி.மீ., நீளமும் 200 முதல் 250 அடி அகலமும் இருந்த இவ்வோடை, ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது.இதனால், லேசான மழை பெய்தாலே, இப்பகுதிகளில் வெள்ளம் தேங்குகிறது. 2015 கன மழையில், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை வெள்ளத்தில் மூழ்கியது.அதன்பின், ஓடையை துார்வாரி, ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தினர். ஆனால், பராமரிக்காமல் விட்டதால், செடி, கொடிகள் வளர்ந்து, ஓடை ஒன்று இருப்பதே தெரியாத அளவிற்கு புதர்மண்டியது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, ஓடையில் புதர்களை அகற்றி, சீரமைக்கும் பணி நடக்கிறது.திருமுடிவாத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்திற்கு, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் புதர்களை அகற்றி, சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால், செல்லேரி ஓடையில் மழை நீர் தடையின்றி ஓடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X