பொது செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு காவல் நீட்டிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு, பெண்களை மானபங்கம்படுத்திய வழக்கில், காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷ்னல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 74, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவியர் புகார் அளித்தனர்.இதையடுத்து நான்கு

செங்கல்பட்டு : பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு, பெண்களை மானபங்கம்படுத்திய வழக்கில், காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷ்னல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 74, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவியர் புகார் அளித்தனர்.

இதையடுத்து நான்கு போக்சோ வழக்கு மற்றும் அதே பள்ளியில் பெண்களை மானபங்கம்படுத்தியதாக இரு வழக்கு பதியப்பட்டது. இதில் பெண்களை மானபங்கம் படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.இவ்வழக்கு விசாரணை செங்கல்பட்டு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில், நேற்று நடந்தது. நீதிபதி - பொறுப்பு - ரீனா முன், போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி, வரும் 30ம் தேதி வரை, சிவசங்கர் பாபாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X