பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்க்கு பஞ்சமில்லாத

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஒன்பது ரக உஜ்ஜலா கத்திரி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த பி.சந்திரசேகரன் கூறியதாவது:ஆனி மாதம், ஒன்பது விதமான உஜ்ஜாலா ரக கத்திரி நாற்று விட்டு, ஆடி மாதம் துவக்கத்தில், செடிகளை நடவு செய்தேன். புரட்டாசி மாதம் துவக்கத்தில் காய் காய்க்க துவங்கியது. முதலில், ஐந்து ரக காய்கள் காய்க்க துவங்கி விடுகிறது. அடுத்த நான்கு ரகம், மெல்ல
 வருவாய்க்கு பஞ்சமில்லாத

ஒன்பது ரக உஜ்ஜலா கத்திரி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த பி.சந்திரசேகரன் கூறியதாவது:ஆனி மாதம், ஒன்பது விதமான உஜ்ஜாலா ரக கத்திரி நாற்று விட்டு, ஆடி மாதம் துவக்கத்தில், செடிகளை நடவு செய்தேன்.

புரட்டாசி மாதம் துவக்கத்தில் காய் காய்க்க துவங்கியது. முதலில், ஐந்து ரக காய்கள் காய்க்க துவங்கி விடுகிறது. அடுத்த நான்கு ரகம், மெல்ல காய்க்கிறது.இது, விரத காலங்களில், நல்ல வருவாய்க்கு வழி வகுக்கிறது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில், கத்திரிக்காயை ரகம் பிரித்து விற்றால், விலை இரட்டிப்பாக கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இருப்பினும், மழைக்காலங்களில், வேர் அழுகல் நோய் தாக்காமல் பாதுகாத்தால், ஆண்டு முழுதும் மகசூல் பெறலாம். வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 88388 85322

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X