தமிழ்நாடு

ரெட்டேரியில் ஆண் சடலம் மீட்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
புழல் : ரெட்டேரியில் மிதந்த ஆண் சடலத்தை, போலீசார் மீட்டனர்.சென்னை புழல் அடுத்த மாதவரம், ஆட்டு சந்தை இடத்திற்கு அருகே, நேற்று காலை, 9:00 மணி அளவில், ரெட்டேரி நீர் பரப்பில், 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார், மாதவரம் தீயணைப்பு துறையினர் வாயிலாக, அந்த சடலத்தை மீட்டனர்.அவர் எப்படி இறந்தார் மற்றும் அவர் யார் என்பது குறித்த விபரங்கள்,

புழல் : ரெட்டேரியில் மிதந்த ஆண் சடலத்தை, போலீசார் மீட்டனர்.சென்னை புழல் அடுத்த மாதவரம், ஆட்டு சந்தை இடத்திற்கு அருகே, நேற்று காலை, 9:00 மணி அளவில், ரெட்டேரி நீர் பரப்பில், 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.

இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார், மாதவரம் தீயணைப்பு துறையினர் வாயிலாக, அந்த சடலத்தை மீட்டனர்.அவர் எப்படி இறந்தார் மற்றும் அவர் யார் என்பது குறித்த விபரங்கள், போலீசாருக்கு கிடைக்கவில்லை.இந்த நிலையில், அந்த சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே, ஏரிக்கரையில் கிடந்த ஒரு ஆடையில், ஆதார் அட்டை இருந்தது. அதில், ஜெகதீஷ், 49, தந்தை பெயர் ஆதிமுத்து, வியாசர்பாடி என்ற முகவரி இருந்தது. அதன் வாயிலாக, ஏரியில் சடலமாக கிடந்தது, அந்த முகவரியை சேர்ந்தவர் தானா என, புழல் போலீசார்விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X