பொது செய்தி

தமிழ்நாடு

'இறை இடம் இவர்' ஓவிய கண்காட்சி துவக்கம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
அம்பத்துார் : டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், இறை நெறி ஓவியர் ஆ.மணிவேலுவின், 'இறை இவர் இடம்' என்ற ஓவிய கண்காட்சி இன்று துவங்குகிறது.ஓவியர் மணிவேலு, உ.பி., மாநிலம், வாரணாசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள, பழமையான கோவில்களின் கருவறையில், பல்வேறு அலங்காரங்களுடன் இருக்கும் வழிபாட்டு சிற்பங்களை, ஓவியமாக வரைந்துள்ளார்.இந்த ஓவியங்கள் அடங்கிய

அம்பத்துார் : டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், இறை நெறி ஓவியர் ஆ.மணிவேலுவின், 'இறை இவர் இடம்' என்ற ஓவிய கண்காட்சி இன்று துவங்குகிறது.

ஓவியர் மணிவேலு, உ.பி., மாநிலம், வாரணாசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள, பழமையான கோவில்களின் கருவறையில், பல்வேறு அலங்காரங்களுடன் இருக்கும் வழிபாட்டு சிற்பங்களை, ஓவியமாக வரைந்துள்ளார்.

இந்த ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ், 'இறை இவர் இடம்' என்ற தலைப்பில் நடத்துகிறது. ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை அம்பத்துார் எஸ்டேட்டில் உள்ள, டாட் ஸ்கூல் ஆப் டிசைனில், இன்று மதியம் 2:30 மணிக்கு துவங்குகிறது.அதில் சிறப்பு விருந்தினராக, டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் சுதாசேஷயன், மத்திய கலாசார துறையின் லலித் கலா அகாடமியின் மண்டல செயலர் சோவன்குமார், பங்கேற்கின்றனர். இந்த கண்காட்சி, அடுத்த மாதம் 14ம் தேதி வரை, தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X