நடத்துனருக்கு மிரட்டல் ஓசி பயணி அலப்பரை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்துனருக்கு மிரட்டல் 'ஓசி' பயணி அலப்பரை

Added : நவ 17, 2021
Share
சேத்துப்பட்டு : பஸ்சில் பயணிக்க 'டிக்கெட்' எடுக்க சொன்னதால், நடத்துனரை கத்திமுனையில் மிரட்டிய போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.பிராட்வே - கோயம்பேடு நோக்கி தடம் எண்: 15டி மாநகர பஸ் நேற்று கீழ்ப்பாக்கம் அருகில் சென்றது. அதில் மின்ட் தெரு, குள்ளப்ப சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 24, என்பவர் குடிபோதையில் பயணித்து உள்ளார்.அவரிடம் நடத்துனர் டிக்கெட்

சேத்துப்பட்டு : பஸ்சில் பயணிக்க 'டிக்கெட்' எடுக்க சொன்னதால், நடத்துனரை கத்திமுனையில் மிரட்டிய போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

பிராட்வே - கோயம்பேடு நோக்கி தடம் எண்: 15டி மாநகர பஸ் நேற்று கீழ்ப்பாக்கம் அருகில் சென்றது. அதில் மின்ட் தெரு, குள்ளப்ப சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 24, என்பவர் குடிபோதையில் பயணித்து உள்ளார்.அவரிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது, மாரிமுத்து நடத்துனரிடம் கத்தியை காட்டி மிரட்டிஉள்ளார்.தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரித்தனர்.

இதில், முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, மொபைல் போன் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X