பொது செய்தி

தமிழ்நாடு

காசோலை மோசடி: 'மாஜி' ஊழியர் கைது

Added : நவ 17, 2021
Share
Advertisement
அண்ணா நகர் : அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் வங்கியில், வாடிக்கையாளர்களின் காசோலையை தவறாக பயன்படுத்தி, பணத்தை 'ஆட்டை' போட முயன்ற முன்னாள் வங்கி ஊழியர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.அண்ணா நகரில், பிரபல தனியார் வங்கி செயல்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம் வந்த மர்மநபர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரின் பெயரில் காசோலை வாங்கி, அவரை போன்று போலியாக கையெழுத்திட்டு

அண்ணா நகர் : அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் வங்கியில், வாடிக்கையாளர்களின் காசோலையை தவறாக பயன்படுத்தி, பணத்தை 'ஆட்டை' போட முயன்ற முன்னாள் வங்கி ஊழியர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகரில், பிரபல தனியார் வங்கி செயல்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம் வந்த மர்மநபர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரின் பெயரில் காசோலை வாங்கி, அவரை போன்று போலியாக கையெழுத்திட்டு பணத்தை பெற முயற்சி செய்தார்.இதை அறிந்த வங்கி மேலாளர், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபரை பிடித்து, அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.விசாரணையில், பிடிபட்ட நபர் அசோக் நகரைச் சேர்ந்த விஜய் வர்மா, 26, என்பது தெரிய வந்தது. அவரை வங்கிக்கு அனுப்பி போலியாக கையெழுத்து போட்டு, பணத்தை எடுத்து வரக் கூறியது, மதுரவாயலைச் சேர்ந்த பரத், 33, என்பதும் தெரிய வந்தது.தொடர் விசாரணையில் தெரிய வந்ததாவது:

கடந்த ஏழு ஆண்டுகளாக தனியார் வங்கி கிளை அலுவலகங்களில் பணிபுரிந்த பரத், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், வேலையை விட்டு நின்றுள்ளார்.பின், வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்து, மூன்று மாதங்களாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.காசோலை தீர்ந்து விட்டதாக கூறி, வாடிக்கையாளரின் பெயரிலே கடிதம் அனுப்பி காசோலை பெற்றுள்ளார். பின் அதில், போலியாக கையெழுத்திட்டு பணம் பெற்று வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக, விஜய் வர்மா இருந்துள்ளார்.இவர்கள், கடந்த மாதம் கோயம்பேடில் உள்ள வங்கியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. அதேபோல், இவர்கள் பல்வேறு கிளைகளில், 10 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இருவரையும் கைது செய்த அண்ணா நகர் போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X