பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து விழும் பள்ளங்களால் எம்.ஜி.ஆர்., நகர் சாலையில் அபாயம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., நகர் : அண்ணா பிரதான சாலையில் அடுத்தடுத்து ஆங்காங்கே விழும் பள்ளங்களால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் செய்வதறியாது விழிபிதுங்கி உள்ளனர்.கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலையாகும்.இச்சாலை வழியாக, நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு
 அடுத்தடுத்து விழும் பள்ளங்களால் எம்.ஜி.ஆர்., நகர் சாலையில் அபாயம்

எம்.ஜி.ஆர்., நகர் : அண்ணா பிரதான சாலையில் அடுத்தடுத்து ஆங்காங்கே விழும் பள்ளங்களால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் செய்வதறியாது

விழிபிதுங்கி உள்ளனர்.கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலையாகும்.இச்சாலை வழியாக, நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்கிறது. இந்த கழிவு நீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, அடிக்கடி 'மெகா' பள்ளங்கள் விழுந்தன.இதற்கு நிரந்தர தீர்வு காண, 2.20 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுப் பாதையில் இன்னொரு குழாய் அமைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்து, பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அண்ணா பிரதான சாலையில், மாநகராட்சி குப்பை அகற்றும் பேட்டரி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் 8ம் இரவு திடீரென சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.இதை குடிநீர் வாரிய ஊழியர்கள் சீர் செய்து வரும் நிலையில், அசோக் நகர் -- நெசப்பாக்கம் செல்லும் அண்ணா பிரதான சாலையில், மீண்டும் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக போக்கு வரத்துள்ள சாலை என்பவதால், திடீரென ஆங்காங்கே பள்ளம் ஏற்படுவதால் விபத்துகள், உயிர்பலி அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.அண்ணா சாலையில் பள்ளம் விழும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதே நேரம் செய்வதறியாது அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X