பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலையத்திற்கு '3 அடுக்கு' பாதுகாப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : 'பிரிட்டிஷ்' ஆட்சியில் கட்டப்பட்டு, நுாற்றாண்டை கடந்த உத்திரமேரூர் காவல் நிலைய கட்டடம், மழையில் பாதிக்காமல் இருக்க, மூன்றடுக்கு தார்பாலின் போடப்பட்டு உள்ளது.உத்திரமேரூர் காவல் நிலையம், 112 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது.இங்கு பெருநகர் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கான
 போலீஸ் நிலையத்திற்கு '3 அடுக்கு' பாதுகாப்பு

உத்திரமேரூர் : 'பிரிட்டிஷ்' ஆட்சியில் கட்டப்பட்டு, நுாற்றாண்டை கடந்த உத்திரமேரூர் காவல் நிலைய கட்டடம், மழையில் பாதிக்காமல் இருக்க, மூன்றடுக்கு தார்பாலின் போடப்பட்டு உள்ளது.

உத்திரமேரூர் காவல் நிலையம், 112 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது.இங்கு பெருநகர் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எனப்படும் வட்ட ஆய்வாளர் அலுவலகம், நான்கு சப் - இன்ஸ்பெக்டர் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் 83 கிராமங்கள், இக்காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளன.நுாற்றாண்டை கடந்த பழமையான இக்கட்டடத்தில், கரையான் அரித்துள்ளதால், ஓடுகள் பொருத்தப்பட்டுள்ள மரச்சட்டங்கள் சிதிலமடைந்துள்ளன.மேலும், மழைக்கு ஆங்காங்கே ஒழுகுவதால், கட்டடத்தின் ஓடு வேய்ந்த கூரையில் மூன்றடுக்கு

தார்பாலின் போட்டு மூடியுள்ளனர்.இருப்பினும், சில இடங்களில் மழைநீர் கசிவதால், வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், பதிவேடுகளை பாதுகாக்க, போலீசார் படாதபாடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக மழைக்காலங்களில், பல காரணங்களுக்காக வரும் பொதுமக்கள், கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனே, காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. போலீசாரும், பழமையான கட்டடத்தில் பணிபுரிய அச்சப்படுகின்றனர்.சிதிலமடைந்த பழைய கட்டடத்தில் இயங்கும் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X