பொது செய்தி

தமிழ்நாடு

'லிப்ட்' கேட்பது போல் நடித்து வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஆவடி : ஆவடி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரிடம் 'லிப்ட்' கேட்பது போல், நுாதனமாக நகை, 13 ஆயிரம் ரூபாய் பறித்த சம்பவம் குறித்து, மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.தாம்பரம், சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 24.இவர், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஆவடி அருகே உள்ள சோழன்சேரி பகுதியில், மர்ம நபர் 'லிப்ட்' கேட்டு

ஆவடி : ஆவடி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரிடம் 'லிப்ட்' கேட்பது போல், நுாதனமாக நகை, 13 ஆயிரம் ரூபாய் பறித்த சம்பவம் குறித்து, மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாம்பரம், சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 24.இவர், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஆவடி அருகே உள்ள சோழன்சேரி பகுதியில், மர்ம நபர் 'லிப்ட்' கேட்டு உள்ளார்.அஜித்குமாரும், அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றார். சிறிது துாரத்தில், மேலும் இருவர் அவரது வாகனத்தை வழிமறித்து உள்ளனர்.அப்போது, பின் இருக்கையில் இருந்த மர்ம நபர், அஜித்குமாரின் கையை முறுக்கிப் பிடித்துள்ளார். பின், மூவரும் அவரை முட்புதருக்குள் இழுத்துச் சென்று, 7 கிராம் நகையை பறித்துள்ளனர். மேலும், அஜித்குமார் வங்கிக் கணக்கிலிருந்து, 'கூகுள் பே' செயலி வாயிலாக, 13 ஆயிரம் ரூபாயை எடுத்ததுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தப்பிஉள்ளனர்.இது குறித்து, அஜித்குமார் அளித்த புகாரின்படி, ஆவடி போலீசார் நேற்று இரவு, மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X