பொது செய்தி

தமிழ்நாடு

இடிந்து விழுந்த பள்ளி கூரை புது கட்டடம் கட்ட கோரிக்கை

Added : நவ 17, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சேதமடைந்த வகுப்பறை கட்டடத்தை இடித்து அகற்றி, புது கட்டடம் கட்டி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 170 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள வகுப்பறை கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன்

காஞ்சிபுரம் : பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சேதமடைந்த வகுப்பறை கட்டடத்தை இடித்து அகற்றி, புது கட்டடம் கட்டி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

.காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 170 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள வகுப்பறை கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.தற்போது பெய்து வரும் மழைக்கு, சுவரில் தண்ணீர் இறங்குகிறது. மேலும் கட்டடத்தின் ஒரு பகுதியில் கூரை சிமென்ட் பூச்சு விழுந்துள்ளது. இதனால் அந்த வகுப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பழைய வகுப்பறை கட்டடம் பழுதடைந்துள்ளது. இதை இடித்து புதிய கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் அனுப்பியுள்ளோம். யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள மாணவர்களை, மற்ற வகுப்புடன் சேர்த்து பாடம் சொல்லி கொடுக்கிறோம். மீண்டும் பலத்த மழை பெய்து, கட்டடம் இடிந்து விழுந்தால் மாணவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X