பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை வழக்கு மேலும் 4 பேர் சிக்கினர்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருமங்கலம் : கொளத்துாரைச் சேர்ந்த பழக்கடை வியாபாரியின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வாசு, 53; அதே பகுதியில் பழக்கடை வைத்துள்ளார்; இவரது மகன் மகேஷ், 21.கடந்த 4ம் தேதி இரவு, மகேஷ் தன் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 22, ஹரிகரன், 21,

திருமங்கலம் : கொளத்துாரைச் சேர்ந்த பழக்கடை வியாபாரியின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கொளத்துார்,

ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் வாசு, 53; அதே பகுதியில் பழக்கடை வைத்துள்ளார்; இவரது மகன் மகேஷ், 21.கடந்த 4ம் தேதி இரவு, மகேஷ் தன் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 22, ஹரிகரன், 21, ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். பின், இருசக்கர வாகனங்களில் திருமங்கலம் - கோயம்பேடு வழியாக மூவரும் சென்றனர்.

அப்போது, கோயம்பேடு அருகில் பெட்ரோல் தீர்ந்ததால் இவர்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த போதை கும்பலுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கு கைகலப்பு ஏற்பட்டதில், மகேஷை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி தப்பியுள்ளனர்

.இதில், பலத்த காயமடைந்த மகேஷ், அரசு மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த திருமங்கலம் போலீசார் பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த காமேஷ், 19, உட்பட மூன்று சிறுவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த, ஆகாஷ், 30, பிரகாஷ், 20, சதீஷ், 25, மாதவன், 20, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X