சென்னை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழக கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம் சார்பில், 'தீபத் திருவிழா' விற்பனை கண்காட்சி துவங்கியுள்ளது.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள விற்பனையகத்தில் கண்காட்சியை முன்னிட்டு பித்தளை, களிமண், மாக்கல், மெழுகு போன்றவைகளில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதில், 18 அங்குலம் முதல் 72 அங்குலம் உயர அளவுள்ள நகாசு விளக்குகள், விநாயகர், லட்சுமி விளக்கு, அன்னலட்சுமி, அஷ்டலட்சுமி விளக்குகள் ஆகியவை இடம் பெற்று உள்ளன.கண்காட்சியில், இந்தாண்டு புது வரவாக, எட்டு அடி லட்சுமி கிளை விளக்கு, ஆறரை அடி அன்னம் கிளை விளக்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அனைத்து விளக்குகளுக்கும், 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப் படுகிறது.வரும், 30ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சிக்கு, பார்வையாளர்கள் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE