பொது செய்தி

தமிழ்நாடு

சாலை கழிவுகள் அகற்றம் பொதுமக்கள் நிம்மதி

Added : நவ 17, 2021
Share
Advertisement
வேளச்சேரி : வேளச்சேரியில், மழையால் தேங்கிய சாலை கழிவுகளை அகற்றப்பட்டதால், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியோர், தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.சென்னையில், கடந்த வாரம் பெய்த கனமழையால், பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, வேளச்சேரி, விஜயநகர், ராம் நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அங்கு வசித்த பலர் உறவினர்கள்,

வேளச்சேரி : வேளச்சேரியில், மழையால் தேங்கிய சாலை கழிவுகளை அகற்றப்பட்டதால், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியோர், தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.

சென்னையில், கடந்த வாரம் பெய்த கனமழையால், பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, வேளச்சேரி, விஜயநகர், ராம் நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அங்கு வசித்த பலர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.வேளச்சேரி பகுதியில் உள்ள, கழிவு நீர் வெளியேற்று நிலைய கழிவு நீரை, வடிகாலில் விட்டதால், தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்தது.மழை நீர் வடிந்தும், கழிவுநீரில் உள்ள கழிவுகள் சாலையில் பதிந்தது. இதனால், சாலைகளில் துர்நாற்றம் வீசியதுடன் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியோர், தங்கள் சொந்த, வாடகை வீடுகளுக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர்.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ராம் நகர், விஜய நகர் பகுதியில் உள்ள சாலை கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர்.இதை தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியோர், வேளச்சேரியில் உள்ள தங்கள் சொந்த, வாடகை வீடுகளுக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X