எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பூங்கா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பூங்கா

Added : நவ 17, 2021
Share
சென்னை : காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தாயரித்து வழங்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு, 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், மாநல்லுார்; காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையப்

சென்னை : காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தாயரித்து வழங்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு, 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மாநல்லுார்; காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.இந்த பூங்கா அமைக்க, விரிவான முதன்மை திட்டம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்க சிப்காட் முடிவு செய்துள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்க, வரும், 24ம் தேதி மாலை 3:00 மணிக்குள் விண்ணப்பிக்க, சிப்காட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விரிவான தகவல்களை, www.sipcot.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X