பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரி பிரதான சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை : ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த வேளச்சேரி பிரதான சாலை நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விடப்பட்டது. இதனால், மக்கள் சிரமம் இன்றி பயணித்தனர். கிண்டியில் இருந்து, காந்திசாலை, தண்டீஸ்வரம் வழியாக, விஜய நகர் நோக்கி செல்லும், வேளச்சேரி பிரதான தார் சாலை, 60 அடி அகலம் கொண்டது. சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து, வேளச்சேரி வழியாக செல்லும் அனைத்து
 வேளச்சேரி பிரதான சாலை  மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

சென்னை : ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த வேளச்சேரி பிரதான சாலை நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.

இதனால், மக்கள் சிரமம் இன்றி பயணித்தனர். கிண்டியில் இருந்து, காந்திசாலை, தண்டீஸ்வரம் வழியாக, விஜய நகர் நோக்கி செல்லும், வேளச்சேரி பிரதான தார் சாலை, 60 அடி அகலம் கொண்டது. சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து, வேளச்சேரி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகள், இந்த சாலை வழியாக செல்கின்றன.

இந்த சாலையில், வேளச்சேரி மின் வாரிய அலுவலகம் மற்றும் காவல் நிலையம் இடைப்பட்ட 250 அடி நீள பகுதி மிகவும் மோசமாக இருந்தது. சாலை, அடிக்கடி சேதமடைவதால், இந்த பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதை, மழைக்கு முன் செய்திருக்க வேண்டும்.மாறாக, 4ம் தேதி இரவு, சாலை போடும் பணி துவங்கியது. பருவமழை, 6ம் தேதி முதல் பெய்ததால், பணி நிறுத்தப்பட்டு, சாலை மூடப்பட்டது. மாநகர பஸ்கள் உட்பட, அனைத்து வாகனங்களும், விரைவு சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

இதனால், காந்திசாலை, தண்டீஸ்வரம் நகர் சுற்றுவட்டார மக்கள், இரண்டு கிலோ மீட்டர் நடந்து, பஸ் ஏற வேண்டி இருந்தது.மாநகர பஸ்கள், ரயில் நிலையம் சுற்றி சென்றன. இதனால், எரிபொருள் செலவு அதிகரித்ததுடன், பொதுமக்கள் பல்வேறு வழிகளில் அலைக்கழிக்கப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மூடப்பட்ட வேளச்சேரி பிரதான சாலை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. மாநகர பஸ்கள், இந்த வழியாக செல்கின்றன. இதன் மூலம், தண்டீஸ்வரம்நகர், காந்தி நகர் பயணியர் சிரமம் இல்லாமல், பேருந்து ஏறினர். சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால், வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட அலைச்சல் நீங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X