மடிப்பாக்கம் : மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலின், 44ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சென்னை, மடிப்பாக்கத்தில் பதினெட்டு படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடத்தப்படுகிறது.இந்தாண்டு, 44வது பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு, நேற்று சுத்தி கலசம், சுவாமிக்கு புஷ்ப அபிஷேம், படி பூஜை நடந்தது.
இன்று காலை, 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அதைத் தொடர்ந்து புஷ்ப அலங்காரமும், படி பூஜையும் நடக்கிறது. வரும், 21ம் தேதி மதியம், 1:30 மணிக்கு உத்ஸவ பலி, மாலை, 6:30 மணிக்கு அய்யப்ப சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது.வரும், 25ம் தேதி இரவு, 11:00 மணிக்கு பள்ளிவேட்டை நடக்கிறது.
26ம் தேதி காலை, 7:00 பள்ளியெழுச்சியும், மாலை, 5:00 மணிக்கு ஆராட்டும் அதை தொடர்ந்து, 6:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.வரும், 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு சஹஸ்ர சங்காபிஷேகம் நடக்கிறது.பறையளப்பில் பக்தர்கள் பங்கேற்கலாம்
வாழ்நாள் முழுவதும் படியளக்கும் பகவானுக்கு நாம் படியளக்கும் நிகழ்வே பறையளப்பு என கூறப்படுகிறது. பிரம்மோற்சவ காலங்களில் வீடுதேடி வந்து அருள்பாலிக்கும் அய்யப்பனுக்கு, படியளக்கும் நிகழ்ச்சி கொரோனா கட்டுப் பாடு காரணமாக கோவில் வளாகத்திலேயே, இன்று முதல் 26ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இது குறித்த விவரங்களுக்கு, 044-4852 2405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE