தமிழ்நாடு

காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு; நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் அரசு துறை

Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வடபழநி : காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், உயர் நீதிமன்றம் உத்தரவை பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழையின் போது, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் சில இடங்கள் பாதிக்கப்பட காரணம், ஆக்கிரமிப்பு என்பது வெட்ட
 காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு;   நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் அரசு துறை


வடபழநி : காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், உயர் நீதிமன்றம் உத்தரவை பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழையின் போது, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் சில இடங்கள் பாதிக்கப்பட காரணம், ஆக்கிரமிப்பு என்பது வெட்ட வெளிச்சமானது.நஷ்ட ஈடுஅதேபோல், வடபழநி 100 அடி சாலை திருநகர் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதற்கு வடபழநி, திருநகர் வழியாக செல்லும், காவாங்கரை கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான் காரணம்.காவாங்கரை கிளை கால்வாயாக, கோயம்பேடு புல் கால்வாயில் இருந்து பிரிந்து, வடபழநி, திருநகரில் துவங்கி, எம்.எம்.டி.ஏ., சூளைமேடு வழியாக கூவம் ஆற்றில் கலக்கிறது.இந்த கால்வாய், 30 அடி அகலம், 4 கி.மீ., நீளம் உடையது. விருகம்பாக்கம் மேம்பாட்டு திட்டத்தில், இந்த கால்வாய் அமைக்கப்பட்டது.

இதற்காக, 1987ல், திருநகர் பகுதியில் உள்ள 2,345 சதுர அடி நிலத்தை, அரசு கையகப்படுத்தியது. நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.கடும் பாதிப்புஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் யாரும் கண்காணிக்காததால், திருநகரில் கால்வாய்க்குள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் முளைத்தன. சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., பகுதி, கால்வாயின் தடம் தெரியாமல் மாயமாகியுள்ளது.கடந்த, 1992ல், எம்.எம்.டி.ஏ., நில ஆர்ஜித பிரிவின் சிறப்பு தாசில்தார்,

எஸ்.இ.காதர்கனி என்பவர், காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.ஆனால், பொதுப்பணித் துறை அந்த கடிதம் குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், வடபழநி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கு

இந்த கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வடபழநி வடக்கு மாடவீதியை சேர்ந்த தேவா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து, பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன் காரணமாக, 2018 மே மாதம், கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

ஆனால், இன்று வரை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.இதனால், சமீபத்தில் பெய்த மழையில், வடபழநி 100 அடி சாலையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, அடுத்து வரும் மழைக்காலங்களில் வடபழநி 100 அடி சாலையில், மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
17-நவ-202118:15:56 IST Report Abuse
S Bala எத்தனை ஓட்டுக்கள் எந்த கடசிக்கு சாதகமாக இருக்கின்றன என்பதை வைத்தே முடிவு செய்யப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X