தமிழ்நாடு

குடிநீர் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு! ... கன மழை எச்சரிக்கையால் நடவடிக்கை

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை, அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கிய நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அசம்பாவிதங்களால் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாத
குடிநீர் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு  அதிகரிப்பு! ... கன மழை எச்சரிக்கையால் நடவடிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை, அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கிய நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அசம்பாவிதங்களால் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாத இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவ மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் அதிக கன மழை பெய்தது.

இதனால், சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டமும் மளமளவென உயர்ந்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்கள் கருதி, மேற்கண்ட ஐந்து நீர்த்தேக்கங்களில் இருந்தும், உபரி நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கத்தில் முதலில், 250 கன அடியில் துவங்கி, படிப்படியாக, 500, 1000, 1,500, 2,000 கன அடியாக உபரி நீர் திறப்பு உயர்த்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், சில நாட்கள் தொடர்ந்து சராசரியாக, 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதேபோல், புழல், பூண்டி, சோழவரம் நீர்த்தேங்கங்களிலும், உபரி நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டது.தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டியதால், அதற்கு வரும் உபரி நீர் முழுதும் தொடர்ந்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் 10ம் தேதிக்குப் பின், மழை அளவு படிப்படியாக குறைந்து, சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுவதால், நீர் நிலைகளுக்கான வரத்தும் குறைந்தது. .

இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, 250 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. பூண்டி, புழல், சோழவரத்திலும், உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று கன மழையும், நாளை, அதிக கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திடீரென மழை கொட்டி தீர்க்கும்பட்சத்தில், குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அதில் இருந்து ஒரே நேரத்தில் அதிகபடியான உபரி நீரை திறப்பதால், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை, ஆரணியாறு கரையோர பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது

.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து கூடுதல் உபரி நீர் வெளியேற்றும் பணிகளை நீர்வளத்துறையினர் துவங்கியுள்ளனர். ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் இருந்தும், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் வரும் நீரின் வரத்து பூண்டி ஏரிக்கு அதிகரித்துள்ளது. எனவே, பூண்டியில் இருந்து வினாடிக்கு 5,786 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,151 கனஅடி, புழலில் இருந்து வினாடிக்கு 1,195 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சோழவரத்தில் இருந்து வினாடிக்கு 215, தேர்வாய் கண்டிகையில் இருந்து வினாடிக்கு 188 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு வரும் நீரின் அளவை, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவுப்படி, கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இரவு நேர பாதிப்புகளை தவிர்க்க, நேற்று மாலை 6:00 மணிக்கு பிறகும், இன்று அதிகாலை 6:00 மணிக்குள்ளும், கூடுதல் உபரி நீரை திறக்க அரசு தடை விதித்துள்ளது.ஏரிகளுக்கு வரும் நீரின் வரத்தை பொறுத்து, இன்று காலை 6:00 மணிக்கு பின் உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது.நீர் இருப்பு எவ்வளவு?திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும். தற்போது, ஐந்து ஏரிகளிலும் சேர்த்து 9.96 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 2.98 டி.எம்.சி., புழலில் 2.84, பூண்டியில் 2.76 டி.எம்.சி., நீரும் இருப்பு உள்ளது. சோழவரத்தில் 0.79 டி.எம்.சி.,யும், தேர்வாய் கண்டிகையில் 0.50 டி.எம்.சி.,யும் உள்ளது. வடகிழக்கு பருவமழை டிச., மாதம் இறுதிவரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, 10 டி.எம்.சி.,க்கும் குறைவாக ஏரிகளில் நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது. ஏரிகள் நீர் திறப்பு கனஅடிசெம்பரம்பாக்கம் 1,151புழல் 1,195பூண்டி 5,786 சோழவரம் 215 தேர்வாய்கண்டிகை 188ஏரிகள் நீர் திறப்பு கனஅடிசெம்பரம்பாக்கம் 1,151புழல் 1,195பூண்டி 7,046 சோழவரம் 215 தேர்வாய்கண்டிகை 188தொடர்ந்து நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரிசெங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, பருவ மழையால், கடந்த 8ல் அதன் முழு கொள்ளளவான, 23.3 அடியை எட்டியது.

தொடர் மழையால், 10ல் வினாடிக்கு,6,000 கனஅடி வீதம் கலங்கல் வழியாக, உபரி நீர் வெளியேறியது. அடுத்தடுத்த நாட்களில் 8,000 கனஅடி வரை நீர் வெளியேறியது. கடந்த மூன்று நாட்களாக மழை பொழிவு இல்லை என்றாலும், ஏரியில் நிரம்பி நீர், 110 ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.தற்போது 1,500 கனஅடி உபரி நீர் வெளியேறுகிறது. ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடிக்கு மேலாக, 23.8 அடி ஆழத்திற்கு, 694 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X