தமிழ்நாடு

சிதிலமடைந்த நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
நுங்கம்பாக்கம் : நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம் மழையால் மிகவும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், தினசரி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.சென்னையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக பிரதான சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கையை,
 சிதிலமடைந்த நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

நுங்கம்பாக்கம் : நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம் மழையால் மிகவும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், தினசரி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

சென்னையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக பிரதான சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கையை, மாநகராட்சி மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், சிதிலமடைந்த பிரதான சாலைகளிலும், சுரங்கப் பாலங்களிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம், ஆங்காங்கே குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.மேலும், அவசர சேவை வாகனங்களும் அவ்வழியாக செல்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மழை பெய்யும் பட்சத்தில், இந்த சுரங்கப்பாலம் மேலும் மோசமடையும் என்பதால், இப்பாலத்தை சீரமைப்பதில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X