பொது செய்தி

இந்தியா

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு சப் கலெக்டரிடம் வாக்குவாதம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
பாகூர் : உச்சிமேடு தாங்கல் பகுதியில் குப்பை கிடக்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர், சப் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மணப்பட்டு ஏரிக்கரை அருகே இருந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தின் குப்பை கிடங்கு மூடப்பட்டு, சித்தேரி அருகே புற வழிச்சாலை அமைக்க, அரசால் கையப்படுத்தப் பட்ட இடத்தில் குப்பை கள் கொட்டப்பட்டு வந்தது.புறவழிச்சாலை
 குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு  சப் கலெக்டரிடம் வாக்குவாதம்

பாகூர் : உச்சிமேடு தாங்கல் பகுதியில் குப்பை கிடக்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர், சப் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பட்டு ஏரிக்கரை அருகே இருந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தின் குப்பை கிடங்கு மூடப்பட்டு, சித்தேரி அருகே புற வழிச்சாலை அமைக்க, அரசால் கையப்படுத்தப் பட்ட இடத்தில் குப்பை கள் கொட்டப்பட்டு வந்தது.புறவழிச்சாலை பணி துவங்கப்பட்டுள்ளதால், உச்சிமேடு தாங்கல் ஏரி அருகே உள்ள கொம்யூன் பஞ்சாயத்து இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு, மதிக்கிருஷ்ணாபுரம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குப்பை கிடங்கை, தெற்கு மாவட்ட துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, மதிக்கிருஷ்ணாபுரம் விவசாயிகள், 'இங்கு குப்பை கொட்டக் கூடாது. குப்பை கிடங்கு அமைந்தால், அதனை சுற்றியுள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படும்' என்றனர்.மற்றொரு தரப்பினர், 'அரசுக்கு சொந்தமான இடத்தில், குப்பை கொட்டுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

மதில் சுவர் அமைத்து குப்பை கிடங்கு அமைத்துக் கொள்ளலாம்' என்றனர்.இதனால், இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து, சப் கலெக்டர் ரிஷிதா குப்தா, இது தொடர்பாக ஆலோசனை நடத்திட, வருவாய் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளை, தனது அலுவலகத் திற்கு வருமாறு உத்தர விட்டு புறப்பட்டு சென்றார்.ஆய்வின்போது, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், தாசில்தார் குப்பன், சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், உதவிப் பொருளாளர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் முருகையன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X