பொது செய்தி

தமிழ்நாடு

தி.நகர் பிரதான சாலை படுமோசம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : நவ 17, 2021
Share
Advertisement
தி.நகர் : \தி.நகர் பிருந்தாவன் தெரு சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.தி.நகர், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், கண்ணம்மாபேட்டையில் புதிய துணை மின் நிலையம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, மேற்கு மாம்பலம் துணை மின் நிலையத்தில் இருந்து, தரை வழியாக, 33 கே.வி., கேபிள் பதிக்கும் பணி


தி.நகர் : \தி.நகர் பிருந்தாவன் தெரு சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.

தி.நகர், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், கண்ணம்மாபேட்டையில் புதிய துணை மின் நிலையம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, மேற்கு மாம்பலம் துணை மின் நிலையத்தில் இருந்து, தரை வழியாக, 33 கே.வி., கேபிள் பதிக்கும் பணி நடக்கிறது.இதில், தி.நகர் 135வது வார்டு பிருந்தாவன் தெருவில் தரை வழியாக மின் கேபிள் பதிக்கும் பணி நடந்தது. இதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

இதன் காரணமாக, அக்., 6ம் தேதி பிருந்தாவன் தெருவில் துரைசாமி சுரங்கப்பாதை அருகே மண் சரிவால் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் சீர்செய்யப்பட்ட நிலையில், மின்வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்கப்படவில்லை.இதனால், தற்போது பெய்து வரும் மழையால், சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக மாறியுள்ளது.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், அப்பகுதியில் கனரக வாகனங்களுக்காக இரும்பு 'ஷீட்' போடப்பட்டுள்ளது. இதன் முனைப்பகுதி இருசக்கர வாகனங்களின் டயர்களை பதம்பார்க்கும் விதமாக உள்ளது.

இதனால், உயிர்பலி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும். மேலும், பிருந்தாவன் தெரு மற்றும் துரைசாமி சுரங்கப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து கேட்டபோது, 'சாலையில் வெட் மிக்ஸ் கொட்டி சீர் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.'தற்போது, மீண்டும் வெட் மிக்ஸ் கொட்டி சீர் செய்துள்ளோம். மின் வாரிய பணிகள் முடிந்ததும் சாலை முறையாக சீர் செய்யப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X