குறைந்தது காய்கறி விலை பொதுமக்கள் ஆறுதல்| Dinamalar

தமிழ்நாடு

குறைந்தது காய்கறி விலை பொதுமக்கள் ஆறுதல்

Added : நவ 17, 2021
Share
கோயம்பேடு : கன மழை உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில வாரங்களாக, கடுமை யாக உயர்ந்த காய்கறி விலை, தற்போது வரத்து அதிகரிப்பால் சற்று குறைந்துள்ளது. சென்னையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது.தற்போது, மழையின் தாக்கம் குறைந்த நிலையில், வரத்து அதகரிப்பால் காய்கறி விலை கிலோ சற்று குறைந்துள்ளது.இதில், தக்காளி, கேரட்,

கோயம்பேடு : கன மழை உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில வாரங்களாக, கடுமை யாக உயர்ந்த காய்கறி விலை, தற்போது வரத்து அதிகரிப்பால் சற்று குறைந்துள்ளது.

சென்னையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது.தற்போது, மழையின் தாக்கம் குறைந்த நிலையில், வரத்து அதகரிப்பால் காய்கறி விலை கிலோ சற்று குறைந்துள்ளது.இதில், தக்காளி, கேரட், முருங்கைக்காய் ஆகிய வற்றின் விலை மட்டும் இன்னும் அதிகமாக உள்ளது. முருங்கைக்காய் சீசன் இல்லாத காரணத்தால், 1 கிலோ, 100 -- 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கேரட் வரத்து குறைவு காரணமாக, கிலோ 20 -- 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக்காளியை பொறுத்தவரை, சென்னைக்கு தினமும் 1,110 டன் தேவை உள்ளது.மழையின் போது, 400 -- 500 டன் தக்காளி மட்டுமே வந்தது. அதிலும், 200 டன் மழையால் அழுகிவிட்டதால், தக்காளி விலை, 100 ரூபாயை தாண்டியது. தற்போது, 500 டன் தக்காளி வரத்துள்ள நிலையில் நேற்று, 75 -- 90 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் ஆறுதல் அடைந்து உள்ளனர்.காய்கறிகள் ஒரு கிலோ விலைவெங்காயம் 30 -- 35 சின்ன வெங்காயம் 34 -- 45பீன்ஸ் 20 -- 40சவ் சவ் 12 -- 15 முள்ளங்கி 35 -- 40 கோஸ் 18 -- 20வெண்டைக்காய் 35 -- 40 கத்தரிக்காய் 50 -- 60 பாகற்காய் 25 - 30 புடலங்காய் 30 -- 35 வெள்ளரிக்காய் 13- - 15

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X