ஆற்றில் நீந்தி சென்று பிணத்தை அடக்கம் செய்யும் அவலம்| Dinamalar

இந்தியா

ஆற்றில் நீந்தி சென்று பிணத்தை அடக்கம் செய்யும் அவலம்

Added : நவ 17, 2021
Share
பாகூர் : சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததால், சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இடுப்பளவு நீரில் சுமந்து சென்று சடலத்தை அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.புதுச்சேரி, பாகூர் அடுத்த சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, குருவிநத்தம் கிராமங்களில் சுமார் 2,000ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இக்கிராமங்களில் இறப்பவரின் உடல்களை, சோரியாங்குப்பம் பகுதியில் இரண்டாக
 ஆற்றில் நீந்தி சென்று பிணத்தை அடக்கம் செய்யும் அவலம்

பாகூர் : சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததால், சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இடுப்பளவு நீரில் சுமந்து சென்று சடலத்தை அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.

புதுச்சேரி, பாகூர் அடுத்த சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, குருவிநத்தம் கிராமங்களில் சுமார் 2,000ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இக்கிராமங்களில் இறப்பவரின் உடல்களை, சோரியாங்குப்பம் பகுதியில் இரண்டாக பிரிந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றின் நடுவே உள்ள சுடுகாட்டில் அடக்கம், தகனம் செய்து வருகின்றனர்.

அப்பகுதிக்கு செல்ல, 50 மீட்டர் துாரத்திற்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, பிணங்களை சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கும் சமயத்தில், சடலங்களை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்வது சிரமமாக இருந்தது.அதையொட்டி, கடந்த 2014ம் ஆண்டு சுடுகாடு பகுதிக்கு செல்ல, சிமெண்ட் குழாய் பதித்து சிறு பாலம் அமைத்தனர்.

இந்த பாலம் கடந்த 2017ம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுவரை புதிய பாலம் அமைக்கப் படவில்லை.நேற்று முன்தினம் குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி அன்னதாட்சி, 70; உடல் நலக்குறைவால் இறந்தார்.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X