இந்தியா

கோமாரி நோய்க்கு 4 மாடுகள் பலி

Added : நவ 17, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே கோமாரி நோய் தாக்கி ஆடு, மாடுகள் இறப்பதால் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோமாரி நோய் தாக்கி பல மாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் அங்கு முகாமிட்டு ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசி போட்டனர்.இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே கோமாரி நோய் தாக்கி ஆடு, மாடுகள் இறப்பதால் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோமாரி நோய் தாக்கி பல மாடுகள் இறந்தன.

கால்நடைத்துறையினர் அங்கு முகாமிட்டு ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசி போட்டனர்.இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதி புவனேஸ்வரி, 60; வீட்டில் வளர்க்கப்படும் 4 மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியதில் ஒரு மாடு நேற்று முன்தினம் இறந்தது. அதே கிராமத்தில் தனசேகரன் வீட்டில் 3 மாடுகள், 2 கன்றுகுட்டிகளும், முன்னாள் கவுன்சிலர் வடிவேல் வீட்டில் 10 ஆட்டு குட்டிகள் கோமாரி நோய் தாக்கி நேற்று இறந்தன.கால்நடைகள் இறப்பை தடுக்க, கால்நடைத்துறையினர் முகாமிட்டு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X