பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கிறது தோட்டக்கலை பூங்கா சீரமைப்பு பணிக்காக தற்காலிகமாக மூடல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை : மாதவரம் தோட்டக்கலை பூங்கா சமீபத்தில் பெய்த மழைக்கு வெள்ளக்காடாக மாறியது. தேங்கிய நீரை அகற்றும் பணி நடக்கிறது. இதனால், சீரமைப்பு பணி முடியும் வரை, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சென்னை, மாதவரம் பால்பண்ணை அருகே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான தோட்டக்கலை துறை, 20 ஏக்கர் பரப்பளவில், 6 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.அதில், மலர்
 வெள்ளத்தில் மிதக்கிறது தோட்டக்கலை பூங்கா சீரமைப்பு பணிக்காக தற்காலிகமாக மூடல்

சென்னை : மாதவரம் தோட்டக்கலை பூங்கா சமீபத்தில் பெய்த மழைக்கு வெள்ளக்காடாக மாறியது. தேங்கிய நீரை அகற்றும் பணி நடக்கிறது. இதனால், சீரமைப்பு பணி முடியும் வரை, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மாதவரம் பால்பண்ணை அருகே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான தோட்டக்கலை துறை, 20 ஏக்கர் பரப்பளவில், 6 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.அதில், மலர் செடிகள், அழகு மரங்கள், மூலிகை செடிகள், 'போன்சாய்' மர பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல், நீரூற்றுகள், படகு சவாரி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இயற்கை சூழலில் அமைந்த இந்த பூங்கா, 2018ல், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.படகு சவாரிபூங்காவை கண்டு ரசிக்க, சிறுவர்களுக்கு 10 ரூபாய், பெரியவர்களுக்கு 20 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற இந்த பூங்காவில், படகு சவாரி, பேட்டரி கார் பயன்பாடு ஆகியவையும் உள்ளன.இந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல், ஐந்து நாட்கள் நீடித்த பலத்த மழையால்,

சுற்றுவட்டாரங்களில் இருந்து பாய்ந்த மழை வெள்ளம், பூங்காவை மூழ்கடித்தது.அதனால், பூங்காவில் இருந்த பல செடிகள் வெள்ளத்தில் மூழ்கி, அழுகி சேதமடைந்தன. மேலும் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகளும் பூங்காவிற்குள் படை எடுத்துள்ளன.இதையடுத்து, மற்ற பகுதிகளில் இருந்து, பூங்காவிற்குள் பாயும் மழை மற்றும் கழிவுநீரை தடுத்து, பூங்காவில் தேங்கிய நீரை, ஒரே ஒரு மோட்டார் மூலம் அகற்றும் பணி, ஒரு வாரமாக தொடர்கிறது.

ஏமாற்றம்அதன்பின் சேதமடைந்த செடி, மரங்களை அகற்றி, புதிய செடிகள் நடும் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன. அதுவரை பார்வையாளர்களுக்கு வருகை தடை செய்யப்பட்டது.இது பற்றி அறியாமல் பார்வையாளர்கள், அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இன்றும், நாளையும் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கையால், வெள்ள பாதிப்பை முழுமையாக, எப்படி சமாளிப்பது என, தோட்டக்கலை துறையினர் ஆலோசித்துவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X