இந்தியா

புதுச்சேரியில் வேலையின்மை ; மா.கம்யூ., ரங்கராஜன் தகவல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'புதுச்சேரியில் வேலையின்மை 47 சதவீதமாக உயர்ந்துள்ளது' என மா.கம்யூ., மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச் சேரி பிரதேச 23வது மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டு கொடியை தொழிற்சங்க தலைவர் பாலமோகனன் ஏற்றி வைத்தார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார்.மத்தியக் குழு உறுப்பினர் சுதா
 புதுச்சேரியில் வேலையின்மை ;   மா.கம்யூ., ரங்கராஜன் தகவல்


புதுச்சேரி : 'புதுச்சேரியில் வேலையின்மை 47 சதவீதமாக உயர்ந்துள்ளது' என மா.கம்யூ., மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச் சேரி பிரதேச 23வது மாநாடு நேற்று துவங்கியது.

மாநாட்டு கொடியை தொழிற்சங்க தலைவர் பாலமோகனன் ஏற்றி வைத்தார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார்.மத்தியக் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாநாட்டில், மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேசுகையில், 'மத்திய பா.ஜ., அரசின் கொள்கையால் வேலையின்மையும் வறுமையும் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் வேலையின்மை 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எனவே, இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான இயக்கத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது' என்றார்.இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் வாழ்த்திப் பேசினர். வேலை அறிக்கையை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வாசித்தார்.முன்னதாக, சாரம் ஜீவா சிலையிலிருந்து புறப்பட்ட மாநாட்டு ஊர்வலம், பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தை அடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X