2 துறை அதிகாரிகள் அலட்சியம் பாம்பு பீதியில் ஆவடி மக்கள்

Added : நவ 17, 2021
Advertisement
ஆவடி : பாம்பை மீட்கக் கோரிய அழைப்பை தீயணைப்புத்துறை, வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால், ஆவடி மக்கள் பீதியில் உள்ளனர்.ஆவடி கோவர்த்தினகிரி, சீனிவாசா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று காலை, சிறிய பாம்பு ஒன்று புகுந்தது.உடனே பொதுமக்கள், ஆவடி தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.அதற்கு தீயணைப்பு அதிகாரிகள், 'வீட்டிற்குள் புகுந்தால் மட்டும் தான்

ஆவடி : பாம்பை மீட்கக் கோரிய அழைப்பை தீயணைப்புத்துறை, வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால், ஆவடி மக்கள் பீதியில் உள்ளனர்.

ஆவடி கோவர்த்தினகிரி, சீனிவாசா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று காலை, சிறிய பாம்பு ஒன்று புகுந்தது.உடனே பொதுமக்கள், ஆவடி தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.அதற்கு தீயணைப்பு அதிகாரிகள், 'வீட்டிற்குள் புகுந்தால் மட்டும் தான் வருவோம். வனத்துறையை அழையுங்கள்' எனக் கூறியுள்ளனர்.வனத்துறையை தொடர்பு கொண்டு உதவி கேட்ட போது, 'இன்னொரு இடத்தில் பாம்பு பிடிக்க அழைத்துள்ளனர்;

வர தாமதமாகும். பாம்பை விரட்டி விடுங்கள்' என, அலட்சியமாகக் கூறிஉள்ளனர்.இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர். பின், மீண்டும் போலீஸ் அவசர எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.கடைசியில், 30 நிமிடங்களுக்குப் பின் தீயணைப்புத்துறை, வனத்துறை அதிகாரிகள், புகார் குறித்து மொபைல்போனில் விசாரித்துள்ளனர்.ஆனால், அதற்குள் பாம்பு அங்கிருந்து இன்னோரு தெருவிற்குள் புகுந்துள்ளது.தீயணைப்புத் துறை, வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால், ஆவடி மக்கள் பீதியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X