தெருக்களில் பெருக்கெடுத்து பாயும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெருக்களில் பெருக்கெடுத்து பாயும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

Added : நவ 17, 2021
Share
அம்பத்துார் : மழை ஓய்ந்த பிறகும் தெருக்களில் பெருக்கெடுத்து பாயும் கழிவு நீரால், அம்பத்துார் மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.சென்னை அம்பத்துார் மண்டலம் கொரட்டூர், பட்டரவாக்கம், கருக்கு, ஞானமூர்த்தி நகர், ஒரகடம் வளர்மதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை நீர் வடிந்தாலும், கழிவு நீர் தேங்கி உள்ளது. குறிப்பாக வளர்மதி நகரின் வீடு, காலி மனை மற்றும்

அம்பத்துார் : மழை ஓய்ந்த பிறகும் தெருக்களில் பெருக்கெடுத்து பாயும் கழிவு நீரால், அம்பத்துார் மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.

சென்னை அம்பத்துார் மண்டலம் கொரட்டூர், பட்டரவாக்கம், கருக்கு, ஞானமூர்த்தி நகர், ஒரகடம் வளர்மதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை நீர் வடிந்தாலும், கழிவு நீர் தேங்கி உள்ளது. குறிப்பாக வளர்மதி நகரின் வீடு, காலி மனை மற்றும் தெருக்களில், கழிவு நீர் குளமாக தேங்கி உள்ளது.இதனால் அங்கு வசிப்போர் தோல் நோய் மற்றும் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி, உடல் நலம் பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர்.

மேலும், பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், அதை பயன்படுத்த முடியாமல், தனியாரிடம் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இது குறித்து, மாநகராட்சியில் புகார் செய்தும், அதிகாரிகள் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, உடனே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X