புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுரை முதியவர் அழும் வீடியோ வைரல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி ; ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை, கஞ்சா புகைக்கும் வாலி பர்கள் தாக்கியதாக, மதுரை முதியவர் கூறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.மதுரை ஆளவந்தான், கே.கே. நகரைச் சேர்ந்தவர் சலீம், 58; இருதய நோய்க்கு சிகிச்சைபெற, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார்.சிகிச்சை முடிந்து நேற்று ரயில் மூலம் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு செல்ல, புதுச்சேரி


புதுச்சேரி ; ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை, கஞ்சா புகைக்கும் வாலி பர்கள் தாக்கியதாக, மதுரை முதியவர் கூறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

மதுரை ஆளவந்தான், கே.கே. நகரைச் சேர்ந்தவர் சலீம், 58; இருதய நோய்க்கு சிகிச்சைபெற, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார்.சிகிச்சை முடிந்து நேற்று ரயில் மூலம் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு செல்ல, புதுச்சேரி ரயில் நிலையம் வந்தார்.டிக்கெட் எடுத்துக் கொண்டு, நேற்று காலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சலீமை, அங்கு வந்த 4 வாலிபர்கள் தாக்கி, 'பணம் இருக்கா' என கேட்டுள்ளனர்.

பணம் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டனர்.தாக்குதல் குறித்து, ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசாரிடம் சலீம் தெரிவித்தார் அவர்கள், ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளிக்குமாறு கூறி அனுப்பினர்.இந்த நிலையில், கஞ்சா பிடிக்கும் வாலிபர்கள் தன்னை தாக்கியதாக முதியவர் சலீம் கூறும் வீடியோ சமூக வலைதளத் தில் வைரலாக பரவியது.

இதைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு ஆளான சலீம் மற்றும் முதியவரை தாக்கியதாக கூறப்படும் 3 வாலிபர்களை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். முதியவர் புகார் அளிக்க விரும்பாததால், 3 வாலிபர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X