பொது செய்தி

இந்தியா

சிவப்பு ரேஷன் கார்டிற்கு மழை நிவாரணம்... ரூ.5,000 ; முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி : , சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மழை நிவாரணமாக, தலா ரூ.5,000 வழங்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ., ஆகும். ஆனால் இதுவரை 184 செ.மீ., மழை பெய்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள 84
 சிவப்பு ரேஷன் கார்டிற்கு மழை நிவாரணம்... ரூ.5,000 ;  முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி : , சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மழை நிவாரணமாக, தலா ரூ.5,000 வழங்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ., ஆகும். ஆனால் இதுவரை 184 செ.மீ., மழை பெய்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் 61 ஏரிகள் நிரம்பியுள்ளன.கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் நகரப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. நீர் நிலைகள் நிரம்பி வழிந்ததால் அருகாமையில் உள்ள விளை நிலங்களில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தொடர் மழையால் வேலையின்றி தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரமும், சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என, கடந்த 12ம் தேதி அறிவித்தார்.மேலும், மழையால் வேலையிழந்த 48 ஆயிரம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள், 44 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டிற்கு தலா ரூ.5,000 நிவாரணமாக வழங்கப்படும்.மழையில் இறந்த மாடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற பல்வேறு அமைப்பினர். மழையால் வேலையின்றி சிரமப்பட்டு வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல பல்வேறு தரப்பிலிருந்தும் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று மதியம், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலா ளர்கள் மற்றும் மீனவர்களுக்கு மழை நிவாரணமாக ரூ.5,000 வழங்கப்ப டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர் ஆவர்.இதில் இடம் பெறாத சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மழை நிவாரணமாக ரூ.5,000 வழங்கப் படும்.மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், கட்டுமான தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் என ஒரு லட்சத்து 10 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகள் நீங்கலாக, மீதமுள்ள 30 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மழை நிவாரணமாக ரூ.5,000 வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X