பொது செய்தி

தமிழ்நாடு

போதையில் வழிப்பறி மூவர் சிக்கினர்

Added : நவ 17, 2021
Share
Advertisement
வியாசர்பாடி : மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜி, 32; தனியார் நிறுவன ஊழியர்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து, வியாசர்பாடி சர்மா நகர் வழியாக வந்தார்.அப்போது, மதுபோதையில் வந்த மூவர், விஜியை மடக்கி, மது அருந்த பணம் கேட்டு உள்ளனர்.அவர் பணம் தர மறுக்கவே,

வியாசர்பாடி : மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜி, 32; தனியார் நிறுவன ஊழியர்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து,

வியாசர்பாடி சர்மா நகர் வழியாக வந்தார்.அப்போது, மதுபோதையில் வந்த மூவர், விஜியை மடக்கி, மது அருந்த பணம் கேட்டு உள்ளனர்.அவர் பணம் தர மறுக்கவே, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.இது குறித்த புகாரின்படி, எம்.கே.பி., நகர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தனர். இதில் வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த ரசூல்கான், 20; வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த, 14 வயது மற்றும் 17 வயதுள்ள இரு சிறுவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.ரசூல்கானை நேற்று கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரு சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X