சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி ; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவ சேனாதிபதி குருக்கள் செய்திருந்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X