பொது செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனரின் கார் கவிழ்ந்து விபத்து

Added : நவ 17, 2021
Share
Advertisement
அம்பத்துார் : அம்பத்துார் போலீஸ் உதவி கமிஷனரின் குடும்பத்தினர் சென்ற, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சென்னை அம்பத்துார் போலீஸ் உதவி கமிஷனராக இருப்பவர் கனகராஜ். நேற்று காலை, 8:00 மணியளவில் அவரது குடும்பத்தினர், அவர்களது சொகுசு காரில் மதுரவாயலில் இருந்து அம்பத்துாருக்கு, சென்னை புறவழிச்சாலையில் சென்றனர்.அப்போது, அம்பத்துார் தொழிற்பேட்டை அருகே, மற்றொரு லாரி

அம்பத்துார் : அம்பத்துார் போலீஸ் உதவி கமிஷனரின் குடும்பத்தினர் சென்ற, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சென்னை அம்பத்துார் போலீஸ் உதவி கமிஷனராக இருப்பவர் கனகராஜ்.

நேற்று காலை, 8:00 மணியளவில் அவரது குடும்பத்தினர், அவர்களது சொகுசு காரில் மதுரவாயலில் இருந்து அம்பத்துாருக்கு, சென்னை புறவழிச்சாலையில் சென்றனர்.அப்போது, அம்பத்துார் தொழிற்பேட்டை அருகே, மற்றொரு லாரி உரசியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, மீண்டும் நேராகி நின்றது. காரில் இருந்தவர்கள், 'சீட் பெல்ட்' போட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X