இந்தியா

அனைவருக்கும் ரூ.5,000 நிவாரணம் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பாகுபாடின்றி அனைவருக்கும் மழை நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரியில் கன மழை பெய்ததால் வீடுகளில் தண்ணீர் புகுந்து அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப் பட்டனர்; விவசாய பயிர்கள் சேதமானது.கூலி விவசாயிகள், மீனவர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து

புதுச்சேரி : பாகுபாடின்றி அனைவருக்கும் மழை நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை;

புதுச்சேரியில் கன மழை பெய்ததால் வீடுகளில் தண்ணீர் புகுந்து அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப் பட்டனர்; விவசாய பயிர்கள் சேதமானது.கூலி விவசாயிகள், மீனவர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டனர். வணிக நிறுவனங்களில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப் பட்டது.இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி, கட்டுமான தொழிலாளர்கள், மீனவர் களுக்கு மட்டும் 5000 ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.பாதிப்பு வரும்போது, முதல்வர் ரங்கசாமி அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் அறிவித்து, வழங்கி வந்துள்ளார்.தற்போது, பாகுபாடு பார்த்து நிவாரணம் அறிவித்திருப்பதன் மூலம், முதல்வர் ரங்கசாமி பா.ஜ., வின் கைப்பாவையாக இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் தனித்தன்மையுடன் இயங்க வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் தலா 5,000 ரூபாய் மழை நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X