போலீஸ் டைரி - திரவள்ளுவர்| Dinamalar

போலீஸ் டைரி - திரவள்ளுவர்

Added : நவ 17, 2021
Share
இருவர் தற்கொலைகூவம்: கூவம் ஊராட்சி, புதிய காலனியைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகள் பவித்ரா, 25. இவருக்கும், ஆவடி, ராஜா கடை கோவில் பதாகை தெருவைச் சேர்ந்த நாகராஜ். 29, என்பவருக்கும், 2016ல் திருமணம் நடந்ததுஇவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டுப் பிரிந்து, நான்கு மாதத்திற்கு முன் கூவம் கிராமத்தில் உள்ள தன் தாய்

இருவர் தற்கொலை

கூவம்: கூவம் ஊராட்சி, புதிய காலனியைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகள் பவித்ரா, 25. இவருக்கும், ஆவடி, ராஜா கடை கோவில் பதாகை தெருவைச் சேர்ந்த நாகராஜ். 29, என்பவருக்கும், 2016ல் திருமணம் நடந்தது

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டுப் பிரிந்து, நான்கு மாதத்திற்கு முன் கூவம் கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி, நாகராஜ், நண்பர்கள் நால்வருடன் கூவம் கிராமத்திற்கு வந்து மனைவியிடம் சமாதானம் பேசியுள்ளார். அதற்கு பவித்ராவின் தாய் மாலதி, நான்கு நாட்கள் கழித்து அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

இதனால் மன விரக்தியில் இருந்த பவித்ரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் கம்பியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மப்பேடு போலீசார், உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X