ஆண்டார்மடத்தில் சாலை துண்டிப்பு போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
பொன்னேரி : ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலையை வெட்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும், கிராமத்திற்கு செல்லும் சாலையின் பல்வேறு இடங்கள் சேசமடைந்து இருப்பதாலும், போக்குவரத்து பாதித்து உள்ளது.பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே, புதிய தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தொடர் மழை மற்றும் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட
 ஆண்டார்மடத்தில் சாலை துண்டிப்பு போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரி : ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலையை வெட்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும், கிராமத்திற்கு செல்லும் சாலையின் பல்வேறு இடங்கள் சேசமடைந்து இருப்பதாலும், போக்குவரத்து பாதித்து உள்ளது.

பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே, புதிய தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தொடர் மழை மற்றும் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதிய அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, அங்குள்ள பழவேற்காடு செல்லும் சாலையை, 100 மீட்டர் தொலைவிற்கு பொதுப்பணித் துறையினர் வெட்டி ஆற்று நீர் பழவேற்காடு ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஆண்டார்மடம் கிராமத்தினர், அத்தியாவசிய தேவைகளுக்கு பழவேற்காடிற்கு படகில் சென்று வருகின்றனர்.

அதேபோன்று கன மழை மற்றும் ஆற்று நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், மேற்கண்ட கிராமத்திற்கு செல்லும் சாலையின் பல்வேறு பகுதிகள் சேதம் அடைந்து இருக்கின்றன. இதனால், வாகனங்களில் பழவேற்காடு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சாலை வெட்டி எடுப்பு, சேதம் ஆகியவற்றால் ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு கிராமங்களில் போக்குவரத்து பாதித்து உள்ளது.

கடந்த ஆண்டும் ஆற்று நீர் வெளியேறுவதற்காக மேற்கண்ட சாலை வெட்டி எடுக்கப்பட்டு, நீர்வரத்து குறைந்த பின்னரே மீண்டும் அங்கு சாலை சீரமைக்கப்பட்டது.இதனால், இரண்டு மாதங்கள் அங்கு போக்குவரத்து பாதித்தது. தற்போதும் அதே நிலைதான் உள்ளது.மேற்கண்ட சாலையில் சிறுபாலம் அமைக்கவும், சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X