கால்வாய் மூடப்படாததால், ரயில் பயணியர் தவிப்பு | Dinamalar

கால்வாய் மூடப்படாததால், ரயில் பயணியர் தவிப்பு

Added : நவ 17, 2021
Share
திருவாலங்காடு : மணவூர் ரயில் நிலைய பகுதியில், கழிப்பறை கட்ட நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டு, நீர் செல்ல அருகில் தோண்டப்பட்ட கால்வாய் மூடப்படாததால், ரயில் பயணியர், ரயில் நிலையத்திற்குள் செல்ல வழியின்றி சிரமப்படுகின்றனர்.மணவூர் ரயில் நிலைய பகுதியில், பயணியருக்கான கழிப்பறையை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில், நீர் வரத்து கால்வாய் இருந்ததால், கழிப்பறை கட்ட சிரமம்

திருவாலங்காடு : மணவூர் ரயில் நிலைய பகுதியில், கழிப்பறை கட்ட நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டு, நீர் செல்ல அருகில் தோண்டப்பட்ட கால்வாய் மூடப்படாததால், ரயில் பயணியர், ரயில் நிலையத்திற்குள் செல்ல வழியின்றி சிரமப்படுகின்றனர்.

மணவூர் ரயில் நிலைய பகுதியில், பயணியருக்கான கழிப்பறையை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில், நீர் வரத்து கால்வாய் இருந்ததால், கழிப்பறை கட்ட சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில், நீர் வரத்து கால்வாயை அடைத்து, நீர் செல்ல அதன் அருகில் கால்வாய் தோண்டப்பட்டு பின், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது.

கழிப்பறை கட்டி முடித்து, இரண்டு மாதம் ஆன நிலையில், இதுவரையில் நீர் வரத்து கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை.இந்நிலையில், கன மழை காரணமாக கால்வாயை கடந்து செல்ல அமைக்கப்பட்ட பலகை அடித்து செல்லப்பட்டதால், ரயில் நிலையம் செல்லும் பயணியர், கால்வாய் மேல் ஒற்றையடி பாதையை ஏற்படுத்தி ஆபத்தான முறையில் செல்கின்றனர்.இந்நிலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அடைத்து, பாதையை சீரமைத்து தர வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X