விஸ்வநாதபுரம் தடுப்பணை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வநாதபுரம் தடுப்பணை

Added : நவ 17, 2021
Share
நெல்லிக்குப்பம் : விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை கலெக்டர் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் விஸ்வ நாதபுரத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே அ.தி.மு.க.,ஆட்சியில் ரூ. 26 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது பெய்த கனமழையால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது. பத்து நாட்களுக்கு முன் தடுப்பணை அருகே கரையில் விரிசல் ஏற்பட்டது. விழுப்புரம்
 விஸ்வநாதபுரம் தடுப்பணை

நெல்லிக்குப்பம் : விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை கலெக்டர் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் விஸ்வ நாதபுரத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே அ.தி.மு.க.,ஆட்சியில் ரூ. 26 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.

தற்போது பெய்த கனமழையால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது. பத்து நாட்களுக்கு முன் தடுப்பணை அருகே கரையில் விரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் தளவானுார் பெண்ணையாற்றில் கட்டிய தடுப்பணை உடைந்ததால் வெடிவைத்து தகர்த்தனர். அது போன்ற பிரச்னை விஸ்வநாதபுரம் தடுப்பணையில் ஏற்பட கூடாது என்பதால் நேற்று காலை கலெக்டர் பாலசுப்ரமணியம் அந்த பகுதியை ஆய்வு செய்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து

அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். விரிசல் விழுந்த கரையை முறையாக சரி செய்ய வேண்டும். தடுப்பணையின் மறுகரை விழுப்புரம் மாவட்டத்தில் வந்தாலும் அங்கு கரையில் ஏற்பட்ட விரிசலையும் முறையாக சரி செய்ய வேண்டும். தடுப்பணைக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்து கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பொதுப் பணித் துறை செயற் பொறியாளர் பாஸ்கர், உதவி செயற் பொறியாளர் கோவிந்தராஜ், தாசில்தார் பிரகாஷ் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X