கிரைம் செய்திகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மிரட்டல் விடுத்த இருவர் கைது புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புவனகிரி ஓ.என்.ஜி.சி., அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய புவனகிரி ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர் நகர் ஐயப்பன்,28; ராஜித்அலி,20; ஆகியோரை கைது செய்தனர். புவனகிரி பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடம் லாட்டரி சீட்டு என துண்டு சீட்டு கொடுத்து ஏமாற்ற

மிரட்டல் விடுத்த இருவர் கைது

புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புவனகிரி ஓ.என்.ஜி.சி., அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய புவனகிரி ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர் நகர் ஐயப்பன்,28; ராஜித்அலி,20; ஆகியோரை கைது செய்தனர்.

புவனகிரி பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடம் லாட்டரி சீட்டு என துண்டு சீட்டு கொடுத்து ஏமாற்ற முயன்ற புவனகிரி முகம்மதியர் தெரு காதர் 53; என்பரையும் கைது செய்தனர்.

பெண்ணை தாக்கியவர்களுக்கு வலை

புவனகிரி: புவனகிரி அடுத்த பு.மணவெளி ஐயப்பன் குமாரசாமி. அதே பகுதி பிரேம்குமார். இரு குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்தது. இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் ஐயப்பன் குமாரசாமி மனைவி அமுதா,35; என்பவரை பிரேம்குமார் மற்றும் உறவினர்கள் கருணாகரன்,வள்ளி ஆகியோர் சேர்ந்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

காயமடைந்த அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து செல்வம் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.வியாபாரி வீட்டில் திருட்டுபண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை,45; மர வியாபாரி. நேற்று முன் தினம் பிற்பகல் 3:00 மணியளவில் வீட்டில் இருந்து நிலத்திற்கு சென்றார். மாலை 5:00 மணிக்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் பணம், ரூ. 5,000 மதிப்பிலான வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.பெண்ணிடம் செயின் பறிப்பு விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கொம்பாடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராசு மகள் ராஜலட்சுமி, 21; இவர் நாச்சியார்பேட்டையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு நேற்று முன்தினம் பைக்கில் சென்றார்.

கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி விடுதி அருகே சென்ற போது, பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல் விருத்தாசலம்: மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி

இயக்குனர் லலிதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் சித்தலுார் புறவழிச்சாலை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக எம்.சாண்ட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாழக்கொல்லையை சேர்ந்த டிரைவர் குணசேகரன் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X