நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு விருதையில் மாதிரி ஓட்டுப்பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு விருதையில் மாதிரி ஓட்டுப்பதிவு

Added : நவ 17, 2021
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் சேமிப்புக் கிடங்கில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.விருத்தாசலம் நகர்மன்ற கவுன்சிலர்கள் தேர்தலை முன்னிட்டு, சேமிப்புக் கிடங்கில் உள்ள 3,037 கன்ட்ரோல் யூனிட், 1,562 பேலட் யூனிட்டுகள் மூலம் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை அழித்து, புதுப்பிக்கும் பணி நடந்து

விருத்தாசலம் : விருத்தாசலம் சேமிப்புக் கிடங்கில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.விருத்தாசலம் நகர்மன்ற கவுன்சிலர்கள் தேர்தலை முன்னிட்டு, சேமிப்புக் கிடங்கில் உள்ள 3,037 கன்ட்ரோல் யூனிட், 1,562 பேலட் யூனிட்டுகள் மூலம் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை அழித்து, புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்தது.

பின், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. வாக்காளர்கள் ஓட்டளிக்கும் போது பீப் சப்தம், சிவப்பு லைட் பதிவுகள் சரிபார்க்கப்பட்டன. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் சந்தேகங்களுக்கு பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளர்கள் விளக்கமளித்தனர். நகராட்சி கமிஷனர் அருள்செல்வன், மேலாளர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் தி.மு.க., இளைஞரணி பொன்கணேஷ், பா.ஜ., மாவட்ட செயலாளர் முருகவேல், தே.மு.தி.க., நகர செயலாளர் ரமேஷ், வி.சி., ராஜ்குமார், மருதையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X