பொது செய்தி

இந்தியா

கோயில் இடம் ஆக்கிரமிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'கோவில் இடம் ஆக்கிரமிப்பை அகற்றும்படியும் வருவாய் துறையுடன் இணைந்து உடனடியாக சர்வே நடத்தப்படும். 2022, ஜனவரி 30க்குள் அனைத்து கோவில்களும் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது,'' என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.கர்நாடக ஹிந்து அறநிலைய துறையின் கீழ் செயல்படும் 'ஏ' மற்றும் 'பி' பிரிவு
கோயில்  இடம்  ஆக்கிரமிப்பு

பெங்களூரு : 'கோவில் இடம் ஆக்கிரமிப்பை அகற்றும்படியும் வருவாய் துறையுடன் இணைந்து உடனடியாக சர்வே நடத்தப்படும். 2022, ஜனவரி 30க்குள் அனைத்து கோவில்களும் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது,'' என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.

கர்நாடக ஹிந்து அறநிலைய துறையின் கீழ் செயல்படும் 'ஏ' மற்றும் 'பி' பிரிவு கோவில்களின் செயல் அதிகாரிகளுடன், அத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின், அவர் கூறியதாவது:கர்நாடகாவில், 'ஏ' பிரிவில் 270; 'பி' பிரிவில் 139; 'சி' பிரிவில் 34 ஆயிரத்து 217 கோவில்கள் உள்ளன. இதில், மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி, எடியூர் சித்தலிங்கேஸ்வரா, காட்டி சுப்பிரமணியா, பெங்களூரு பனசங்கரி அம்மன் ஆகிய கோவில்கள் மட்டுமே ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளன.

பல ஆண்டுகளாக, பல கோவில்களின் கணக்கு பரிசீலனை செய்யவில்லை. இது பக்தர்கள் மனதில், கோவில் நிர்வாகம் மீது சந்தேகம் எழுப்பும்.எனவே, 2022, ஜனவரி 30 க்குள் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை தாக்கல் செய்யும்படி அனைத்து கோவில்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தனித்தனி இணையதளம் உருவாக்கி, சம்பந்தப்பட்ட கோவில்களின் வரலாறு, சிறப்பு, தகவல்கள் பதிவயேற்றம் செய்யப்படும்.

ஹிந்து அறநிலையத்துறை கோவில்கள் மீது, கர்நாடக அரசின் பலகை பொருத்த வேண்டும்.குறிப்பிட்ட 25 கோவில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து புராதன குளங்கள் மேம்படுத்தப்படும்.கோவில் இடம் ஆக்கிரமிப்பை அகற்றும்படியும் வருவாய் துறையுடன் இணைந்து உடனடியாக சர்வே நடத்தும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X