பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை காப்பதே கடமை அய்யப்பன் எம்.எல்.ஏ., பேச்சு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம் வன்னாங்குட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.பின், அவர் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி கடலுார் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை
  மக்களை காப்பதே கடமை அய்யப்பன் எம்.எல்.ஏ., பேச்சு

கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம் வன்னாங்குட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.பின், அவர் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி கடலுார் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது.

மழைநீர் தேங்காமல் இருக்க கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் மக்களை காப்பது தனது கடமை ' என்றார்.நகர செயலாளர் ராஜா, டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் சித்ராலயா ரவிச்சந்திரன், வக்கீல் வினோத், கிளை செயலாளர் குமரன், மகளிரணி சங்கீதா, பிரதிநிதிகள் நாகராஜ், சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X