தமிழ்நாடு

யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு! பதுக்கலும், ஒரே நபருக்கு விற்பதும் காரணம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை மாவட்டத்தில் தனியார் உர நிறுவனங்கள் ஒரே விவசாயிகளிடம் மொத்தமாக யூரியாவை விற்பதும், தேவைக்கு அதிகமாக சில விவசாயிகள் இருப்பு வைப்பதாலும், தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடியாகிறது. விதைப்புக்கு முன் டி.ஏ.பி. காம்ப்ளக்ஸ் அடியுரமாக தேவைப்பட்டாலும் நடவுக்கு பின்
யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு! பதுக்கலும், ஒரே நபருக்கு விற்பதும் காரணம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தனியார் உர நிறுவனங்கள் ஒரே விவசாயிகளிடம் மொத்தமாக யூரியாவை விற்பதும், தேவைக்கு அதிகமாக சில விவசாயிகள் இருப்பு வைப்பதாலும், தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.


மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடியாகிறது. விதைப்புக்கு முன் டி.ஏ.பி. காம்ப்ளக்ஸ் அடியுரமாக தேவைப்பட்டாலும் நடவுக்கு பின் பயிர் செழிப்பதற்கு யூரியா மேலுரமாக பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 50 கிலோ யூரியா மூடை போதும்.

மதுரையின் சாகுபடியை கணக்கில் கொண்டே உரத்திற்கான தேவை நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவாரமாக சோழவந்தான், அலங்காநல்லுார், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் ஆங்காங்கே யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா கைவசம் இல்லாததால் விவசாயிகள் பயிருக்கு பயன்படுத்த முடியவில்லை.

விவசாய இணை இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது: ஐ.பி.எல். இப்கோ மூலம் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா உரம் வினியோகிக்கப்படுகிறது. மதுரைக்கு தற்போது வரை 1300 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளது. இன்னும் 1650 மெட்ரிக் டன் உரம் வரவேண்டியுள்ளது. கப்பல் போக்குவரத்து மூலம் வர வேண்டியுள்ளதால் 3 நாட்களில் நிலைமை சீராகிவிடும்.

தனியார் நிறுவனங்கள் அதிக மூடை விற்றால் அதிக லாபம் என்ற கணக்கில் மொத்தமாக ஒரே விவசாயிகளிடம் யூரியாவை விற்கின்றனர். விவசாயி சாகுபடி செய்துள்ள ஏக்கரை கணக்கில் கொண்டே யூரியா வழங்க வேண்டும் என உரம் தயாரிப்பாளர்கள், உரக்கடை நிறுவன நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி அறிவுறுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் இதுபோன்ற தவறு நடக்கிறது.

எனவே அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட யூரியா ரசீதையும் எவ்வளவு ஏக்கர் சாகுபடி செய்துள்ளார் என்பதை விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். தேவைக்கு மேல் எந்த விவசாயியின் பெயரில் யூரியா அதிகம் விற்கப்பட்டதோ அந்த கடைக்காரர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளும் தட்டுப்பாடு என்றவுடன் 2 மாதம் கழித்து இடவேண்டிய யூரியாவை இப்போதே வாங்கி பதுக்குகின்றனர். மழைக்காலத்தில் மழையின் மூலம் பயிருக்கு தேவையான நைட்ரஜன் கிடைக்கும். யூரியா அதிகம் இடவேண்டியதில்லை. அப்படி செய்தால் மழையில் கரைந்து வீணாகும். செலவும் நஷ்டம் தான் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X